புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை: அரசு தரப்பு விவாதம்

Switzerland Migrants
By Balamanuvelan Apr 24, 2026 06:06 AM GMT
Report

 புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை எனக்கூறும் விடயம் சுவிட்சர்லாந்தில் விவாதப்பொருளாகிவருகிறது!

பின்னணி

அதாவது, புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) என்னுமொரு பிரேரணையை முன்வைத்துள்ளது. 

புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை: அரசு தரப்பு விவாதம் | Immigration Keeps Young As Swiss Population

ஜூன் மாதம் 14ஆம் திகதி, புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள அந்த பிரேணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த விடயம் சுவிஸ் அரசுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.

ஏனென்றால், சமீபத்திய ஆய்வு முடிவுகள், புலம்பெயர்தல் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதால், சுவிட்சர்லாந்தில் வயதாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தல், பிறப்பு வீதம் குறைதல் ஆகிய காரணங்கள் இணைந்து, கடும் பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மருத்துவத்துறை, கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் துறை ஆகியவை இதனால் கடுமையான பாதிப்புக்குள்ளாகும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் எச்சரிக்கின்றன.

ஆகவே, அரசு தரப்பு, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது என்னும் பிரேரணைக்கு ஆதரவளிக்கவேண்டாம் என மக்களை கோரிவருகிறது.

இப்படிப்பட்ட சூழலில்தான், புலம்பெயர்தல், சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை இளமையாக வைத்துக்கொள்வதில் பெரிதும் உதவுவதாக சுவிஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.  

புலம்பெயர்ந்தோரால் சுவிட்சர்லாந்துக்கு நன்மை: அரசு தரப்பு விவாதம் | Immigration Keeps Young As Swiss Population

சுவிஸ் ஃபெடரல் புள்ளியியல் அலுவலகத் தரவுகள், வெளிநாட்டவர்கள் சுவிஸ் நாட்டவர்களைவிட குறைந்தபட்சம் ஏழு வயதாவது இளையவர்களாக இருப்பதாகவும், அவர்கள் வேலை செய்யும் வயதில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், வேலை செய்வதற்கு புலம்பெயர்ந்தோர் இல்லையென்றால், ஓய்வூதியம் மற்றும் முதியவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்க அரசுக்கு நிதி ரீதியில் அழுத்தம் அதிகரிக்கும் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

ஆக மொத்தத்தில், எப்படியாவது புலம்பெயர்தலுக்கு எதிரான அந்த ’No to 10 Million Switzerland’ பிரேரணைக்கு மக்கள் ஆதரவளித்துவிடகூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

ஆகவேதான் அது தொடர்பில், பிரேரணைக்கு எதிராக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US