திருதிருவென விழித்த கனடா புலம்பெயர்தல் அமைச்சர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு சம்பவம்

Canada
By Balamanuvelan Oct 08, 2026 07:25 AM GMT
Report

Immigration minister appears unaware of court ruling: நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில், கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர், புலம்பெயர்தல் அமைப்பு குறித்து தெரியாமல் விழித்த விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

கனடாவின் ஃபெடரல் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Lena Metlege Diab, கனடா வானொலியில் பங்கேற்ற நேர்காணல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் ஒலிபரப்பாகியுள்ளது.

அப்போது கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில் ஒன்று அகதிகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

திருதிருவென விழித்த அமைச்சர்

புலம்பெயர்தல் துறை அமைச்சரான Diabஇடம், சிங் தீர்ப்பு (Singh decision) என்னும் ஒரு விடயம் தொடர்பில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

திருதிருவென விழித்த கனடா புலம்பெயர்தல் அமைச்சர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு சம்பவம் | Immigration Minister Appear Unaware Ocourt Ruling

அதற்கு அவர், கனடாவில் நிறைய சிங்குகள் இருக்கிறார்கள், பல தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் உருவாக்கப்படுவதற்கே, இந்த சிங் தீர்ப்புதான் காரணம்!

அதாவது, கனடாவின் உச்ச நீதிமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு, Singh v. Minister of Employment and Immigration என்னும் வழக்கில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

சத்னாம் சிங் என்னும் இந்தியர், கனடாவில் புகலிடம் கோரியபோது புலம்பெயர்தல் மேல்முறையீட்டு வாரியத்தின் முன் நேரில் ஆஜராகி வாய்மொழி விசாரணைக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 

AI காட்டிய வழியில் சென்று ஆபத்தான மலையில் சிக்கிய சிறுவன்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

AI காட்டிய வழியில் சென்று ஆபத்தான மலையில் சிக்கிய சிறுவன்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

அப்போது, உச்சநீதிமன்றம், கனேடிய உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் சாசனத்தின் 7ஆவது பிரிவின்கீழ், நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது முழுமையான வாய்மொழி விசாரணைக்கான உரிமை, வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட, கனடாவில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என்றும்,

நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்படும்போது முழுமையான வாய்மொழி விசாரணைக்கான உரிமையை அவர்களுக்கு இது உறுதி செய்கிறது என்றும் தீர்ப்பளித்தது. 

திருதிருவென விழித்த கனடா புலம்பெயர்தல் அமைச்சர்: அதிர்ச்சியை உருவாக்கியுள்ள ஒரு சம்பவம் | Immigration Minister Appear Unaware Ocourt Ruling

அந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட பெரும் நிர்வாகத் தேவை போன்ற விடயங்கள்தான், கனேடிய அரசாங்கத்தை மசோதா C-55ஐ நிறைவேற்றத் தூண்டியது.

இதன் மூலம்தான், கனடாவின் புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் வாரியம் (IRB) 1989ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் திகதியன்று முறையாக நிறுவப்பட்டது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், இன்றும் பல சட்ட ரீதியான சவால்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

ஆனால், கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு இந்த தீர்ப்பு குறித்து தெரியவில்லை.

தனது துறை சார்ந்த முக்கிய விடயம் குறித்தே சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு தெரியவில்லை என்னும் இந்த விடயம் அகதிகள் நல ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னியிடம், இப்படி தனது துறை சார்ந்த விடயங்களே தெரியாத ஒருவர் புலம்பெயர்தல் துறை அமைச்சராக நீடிப்பாரா என கேள்வி எழுப்பப்பட, கார்னி, ஆம், நிச்சயம் நீடிப்பார் என பதிலளித்துள்ளார்! 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US