பிரித்தானியாவின் உயரிய விருது பெற்ற பெண் மீது புலம்பெயர்தல், கடத்தல் குற்றச்சாட்டுகள்
பிரித்தானியாவின் உயரிய விருது பெற்ற பெண் மீது புலம்பெயர்தல், கடத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
யார் இந்த Dame Ann Gloag?
Dame Ann Heron Gloag (80) பிரித்தானியாவின் உயரிய விருதான Order of the British Empire என்னும் விருது பெற்ற பெண்மணியாவார்.
ஸ்காட்லாந்து நாட்டு கோடீஸ்வரியான Dame Ann Gloag, சொந்தமாக போக்குவரத்து நிறுவனம் ஒன்று நடத்திவரும் நிலையில், பல தொண்டு நிறுவனங்களும் நடத்துவருகிறார்.
அவற்றில், Open Door Foundation என்னும் தொண்டு நிறுவனம், ஏழைப்பெண்கள் பாலியல் தொழிலுக்குள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் இயங்கிவருகிறது.
கடத்தலை தடுக்க பாடுபடுபவர் மீதே கடத்தல் குற்றச்சாட்டு
இந்நிலையில், Dame Ann Gloag மீது, மனிதக் கடத்தல் மற்றும் புலம்பெயர்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Dame Ann Gloag, அவரது கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வழக்கு குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகாத நிலையில், Dame Ann Gloagஇன் தொண்டு நிறுவனத்தில் பணி செய்வதற்காக சிலர் ஸ்காட்லாந்துக்கு அழைத்துவரப்பட்டதாகவும், அது தொடர்பாகவே தற்போது அவரது குடும்பம் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.