இன்னும் சில வாரங்கள்தான்... கொரோனா தொடர்பில் பிரித்தானிய அறிவியலாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்
இன்னும் சில வாரங்களில் பிரித்தானியாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கும் என அரசின் அறிவியல் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு பக்கம் இங்கிலாந்தின் கால்பந்து வெற்றியைத் தொடர்ந்து கொரோனா அதிகரிக்கலாம் என்ற பயம் உருவாகியுள்ள நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள ஆவணங்கள் சில இந்த பாஸிட்டிவான செய்தியை தெரிவித்துள்ளன.
தடுப்பூசிகள், இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி, பருவநிலை மற்றும் மக்களுடைய நடத்தை மாற்றம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக சமநிலைக்கு வரும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை, பிறகு சில வாரங்களில் குறையத் தொடங்கும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
ஆனால், எப்போது இது சாத்தியமாகும் என்பதை துல்லியமாக கூற இயலாது என அறிவியலாளர்கள் கூறியிருந்தார்கள்.
இந்நிலையில், ஆகத்து மாதத்தில் கொரோனா தொற்றியோரின் எண்ணிக்கை குறையத்தொடக்கும் என அரசு கருதுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.