பால் முதல் தடுப்பூசி விநியோகம் வரை பாதிப்பு: 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோரத்தாண்டவம் ஆடிய புயலால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா
கனேடிய மாகாணமான பிரிட்டிஷ் கொலம்பியாவில், 500 ஆண்டுகளில் இல்லாத அளவில் கோரத்தாண்டவம் ஆடிய புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
மண் சரிவால் பாதிக்கப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கறந்த பாலை விற்பனையாளர்களிடம் கொண்டு சேர்க்க இயலாததால், பால் உற்பத்தியாளர்கள் பாலை கீழே கொட்டி வருகிறார்கள்.
சுமார் 2,000 பசுக்கள் வெள்ளம் காரணமாக உயிரிழந்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சிலர் தங்கள் பசுக்களை ட்ரக்குகள் மூலமாகவும், ஜெட் ஸ்கீ படகுகள் உதவியுடனும் மீட்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பால் முதலான அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி, பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகிப்பதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, சாதகமற்ற வானிலை காரணமாக தனது தயாரிப்பான கொரோனா தடுப்பூசிகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.