ஒன்லைன் வர்த்தகத்தால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒன்லைன் வர்த்தகத்தால் சுவிஸ் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ள நிலையில், கவுன்சிலர் ஒருவர் உள்ளூர் வியாபாரிகளுக்கு ஆதரவாக சில நடவடிக்கைகளை எடுக்கக் கோரியுள்ளார்.
ஒன்லைன் வர்த்தகத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
சமீபத்தில், Grand Genève பகுதியில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு ஒன்றின் முடிவுகளிலிருந்து, ஒன்லைன் வாயிலாக பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை 2018ஐ ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
ஆகவே, உள்ளூர் வர்த்தகம் மக்கள் ஈர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளார்கள், அரசியல்வாதிகளும் அதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
பிரான்சில் குறிப்பிட்ட அளவில் ஞாயிற்றுக்கிழமையன்று வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவதைபோல, சுவிட்சர்லாந்திலும் அனுமதிக்கப்பட்டால், சுவிஸ் வர்த்தகத்தால் பிரான்ஸ் வர்த்தகத்துடன் போட்டிபோட முடியும் என்கிறார் ஜெனீவா மாகாண கவுன்சிலரான Delphine Bachmann.
உள்ளூர் வர்த்தக மையங்களில் பாதசாரிகளுக்கு போதுமான இடங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுவரும் நிலையில், வியாபாரிகளின் கடை வாடகைகள் குறைப்பு முதலான உதவிகளும் தேவைப்படுவதாக மற்ற அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |