ஜேர்மனியில் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ள மூன்று விடயங்களுக்கான செலவு!
ஜேர்மனியில் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது...
அப்படி முக்கியமாக விலை உயர்ந்துகொண்டே செல்லும் மூன்று விடயங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஜேர்மனியைப் பொருத்தவரை, மளிகைப் பொருட்களானாலும் சரி, எரிபொருள் ஆனாலும் சரி, சமீபத்திய சில மாதங்களாக பல்வேறு பொருட்களின் விலைவாசி கணிசமாக உயர்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை.
ஆகவே, பணவீக்கமும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2022 ஜனவரியில், ஜேர்மனியின் பணவீக்க விகிதம் 4.9 சதவிகிதமாக இருந்தது. அதற்கு முன் நாம்பர் மற்றும் டிசம்பரிலும் அது அதிகமாகவே இருந்தது.
சரி என்னென்ன விடயங்களின் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கிறது?
குறிப்பாக மூன்று விடயங்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வீடு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு...,
முதலாவதாக வீடு
ஜேர்மனியில் வீடுகள் பற்றாக்குறை பல ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினையாகும். ஜேர்மனியில் வாழும் பலர் தங்கள் வருவாயின் பெரும் பகுதியை தங்கள் வீட்டு வாடகைக்காக செலவிட்டு வருகிறார்கள்.
இரண்டாவதாக ஆற்றலுக்காக செலவிடும் (Enenrgy) தொகை
எரிபொருட்கள், மின்சாரம் முதலான ஆற்றல் தொடர்பிலான கட்டணம் இன்றைய சூழலில் மிக அதிகமாக காணப்படுகிறது. அது சந்தையில் விற்கப்படும் பல பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பொருட்களை குளிர்பதனப்படுத்துவதற்கு செலவு அதிகமாகிறது, வீடுகளுக்கு பழுது நீக்க வருபவர்கள் கூட தங்கள் வாகனத்துக்கான எரிபொருள் விலை அதிகமாக இருப்பதால் அதிக கட்டணம் வசூலிக்கவேண்டியதாகிறது.
அடுத்தபடியாக வாகன வாடகை முதல் விமான பயணச்சீட்டுகள் வரை இதனால் விலை அதிகரிக்கிறது.
பொழுதுபோக்குத்துறை
மூன்றாவதாக, ஜேர்மனியில் பொழுதுபோக்குக்காக அதிகம் செலவிடவேண்டிய நிலை காணப்படுகிறது. திரையரங்குகளுக்குச் செல்வதானாலும் சரி, காபி ஷாப்களுக்குச் செல்வதானாலும் சரி, கட்டணம் அதிகமாக உள்ளது.
இதற்கிடையில், தொலைக்காட்சிப் பெட்டி, கணினிகள், கமெராக்கள் முதலான் மின்னணு உபகரணங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆக மொதத்தில், இந்த மூன்று விடயங்களின் விலைவாசி உயர்வுடன், மற்ற அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் மீது அவை ஏற்படுத்தியுள்ள தாக்கமுமாக சேர்ந்து ஜேர்மனியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.