பிரித்தானியா தடுப்பூசி குறித்து கனடா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி குறித்து கனடா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனொக தடுப்பூசி போட்டவர்களுக்கு இரத்த உறைத்தல் பக்க விளைவு ஏற்படுதவாக தகவல்கள் வெளியானதை அடுத்து அச்சத்தில் 12-க்கும் மேற்பட்ட நாடுகள் அந்த தடுப்பூசி பயன்பாட்டிற்கு தற்காலிக தடை விதித்தன.
இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்று கூறியது மற்றும் பிரித்தானியா கட்டுப்பாட்டாளர்கள், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாடு தொடர வேண்டும் என்று கூறினர்.
ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தி மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், இரத்த உறைதலுக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என கனடா சுகாதாரத் துறை அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது
கனடியர்களை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் நன்மைகள் தொடர்ந்து அபாயங்களை விட அதிகமாக இருப்பதை கனடா சுகாதாரத்துறை உறுதிப்படுத்துகிறது என்று அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் இன்றுவரை, தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து ஒரு நபருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அறிக்கை உள்ளது என்று கட்டுப்பாட்டாளர்கள் கூறினார்.
இந்த வழக்கு கனடா சுகாதாரத்துறையால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது மற்றும் இது தடுப்பூசியுடன் தொடர்புடையது அல்ல என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா டோஸ்களை கனடா பயன்படுத்துகிறது.
இதுவரை 5,00,000 டோஸைப் பெற்றுள்ளது, மேலும் மே மாதத்திற்குள் 1.5 மில்லியன் டோஸ்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.