ஜோ பைடன்- புடின் சந்திப்பு: மத்திய ஜெனீவா வாழ் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்தித்துப் பேச இருப்பதையொட்டி, மத்திய ஜெனீவாவில் வாழும் மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில், பாதுகாப்பு நடவடிக்கைகள், சாலைகள் மூடல், குறைவான மக்களுக்கே அனுமதி, படகுப்போக்குவரத்து ரத்து என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பல நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீடுகளிலிருந்தவண்ணம் வேலை செய்ய கேட்டுக்கொண்டுள்ளன.
ஆனால், பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்.
இந்நிலையில், ஜோ பைடனும் புடினும் மத்திய ஜெனீவாவில் உள்ள கட்டிடம் ஒன்றில்
சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், அவர்களது மற்றும் அவர்களுடைய
பாதுகாவலர்கள், பிற அதிகாரிகள் முதலானவர்களின் வாகனங்கள் செல்லும் நேரத்தில்
போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், பொது மக்கள் மத்திய ஜெனீவா பகுதிகளில்
பயணிப்பதை கூடுமானவரை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.