2022 செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள் சில...
எரிபொருள் விலை முதல் பள்ளிக்குச் செல்வோருக்கான போனஸ் வரை, செப்டம்பர் மாதத்தில் பிரான்சில் பல மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
அவற்றில் சில குறித்து பார்க்கலாம்...
கல்வியாண்டு துவக்கம்
செப்டம்பர் 1ஆம் திகதி பிரான்சில் கல்வியாண்டு துவங்குகிறது.
வகுப்புகள் மட்டுமல்ல, அலுவலகங்கள், கடைகள் முதலானவை கூட முழு மூச்சுடன் இயங்க உள்ளன.
நாடாளுமன்றம் செயல்படாது
வழக்கமாக பிரான்ஸ் நாடாளுமன்றம் விடுமுறைக்குப் பின்பு செப்டம்பர் மாதம் மீண்டும் கூடும். ஆனால், இம்முறை கோடைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆகத்து 7ஆம் திகதி வரை நீடித்ததால், மீண்டும் அக்டோபர் 3ஆம் திகதிதான் நாடாளுமன்றம் கூட உள்ளது. ஆனாலும், கேபினட் கூட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும்.
எரிபொருள் விலை
வாகனங்களுக்கான எரிபொருள் விலைவாசியால் மக்கள் திணறிவரும் நிலையில், அரசு வழங்கும் எரிபொருள் தள்ளுபடி செப்டம்பர் 1 முதல் சற்று உயர இருக்கிறது.
வீட்டுக்கடன் காப்பீடு
செப்டம்பர் 1 முதல், மக்கள் தங்கள் வீட்டுக்கடனுக்கான காப்பீட்டு நிறுவனத்தை எந்த கட்டணமும் இன்றி, எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்.
அமேசான் பிரைம் கட்டண உயர்வு
செப்டம்பர் 15 முதல் அமேசான் பிரைம் கட்டணம் உயர இருக்கிறது.
பாரம்பரிய நாட்கள்
செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்கள், பாரம்பரிய நாட்களாக கொண்டாடப்பட உள்ளதால், அந்த நாட்களில் ஜனாதிபதி மாளிகையான எலிசி மாளிகை முதலான பிரான்சின் முக்கிய கட்டிடங்கள் சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆனால், முன்பதிவு அவசியம்.
கல்லூரி உதவித்தொகை
உங்கள் மகன் அல்லது மகள், 2022 செப்டம்பரில் கல்லூரியில் இணைவாரானால், அவர் கல்லூரி உதவித்தொகை பெறத் தகுதியுடையவராவார்.
பள்ளிக்குத் திரும்புவோருக்கான போனஸ்
செப்டம்பர் 15 முதல் பள்ளிக்குத் திரும்புவோருக்கான போனஸ் வழங்கப்பட உள்ளது
மாணவர்களுக்கான உதவித்தொகை
2022 -2023 கல்வியாண்டுக்கான மாணவர் உதவித்தொகை அதிகரிக்கப்பட உள்ளது.
ஓய்வூதியம் மற்றும் சலுகைகள்
நீங்கள் பிரான்சின் அரசு ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவராக இருப்பீர்களானால், நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துவந்த 4 சதவிகித ஓய்வூதிய உயர்வு இந்த மாதம் வழங்கப்பட உள்ளது. அத்துடன், பிற சலுகைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பசுமை ஆற்றல்
பசுமை ஆற்றல் விநியோகிப்பாளரான OHM Energie நிறுவனம், மாதந்திர மின்கட்டணம் இந்த மாதம் உயர இருப்பதாக அறிவித்துள்ளது.
என்ன மாறவில்லை?
மின்சாரம், எரிவாயு ஆகியவற்றின் விலைகளில் பெரும்பாலும் மாற்றமில்லை.