ஜேர்மனியில் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்...
ஜேர்மனியில், ஏப்ரல் மாதத்தில் ஊதிய உயர்வு முதல் கொரோனா விதிகள் வரை பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அவை குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
கொரோனா விதிகள் பல நீக்கம்
ஏப்ரல் 2ஆம் திகதியுடன் ஜேர்மனியில் பெரும்பாலான கொரோனா விதிகள் விலக்கிக்கொள்ளப்பட உள்ளன.
ஆக, ஏப்ரல் 2க்குப் பிறகு, திரையரங்குகள், மதுபான விடுதிகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் முதலான இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி பாஸ்கள் வேண்டாம்,
ஒரு எச்சரிக்கை, CovPass மற்றும் CoronaWarn ஆப்களை பத்திரமாக வைத்துக்கொள்வது நல்லது. காரணம், புதிய தொற்று பாதுகாப்புச் சட்டம், அதிகம் கொரோனா பரவும் இடங்கள் தங்களை hotspots என அறிவித்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஆகவே, அப்படி அறிவிக்கப்படும் இடங்களில் சில விதிகள் தொடர்ந்து அமுலில் இருக்கும்.
பல துறைகளில் ஊதிய உயர்வு
ஏப்ரல் 1 முதல் பல துறைகளில் பணி புரிவோருக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.
வாகனம் ஓட்டப் பயிற்சி பெறும் சாரதிகளுக்கு புதிய கேள்விகள்
ஜேர்மனியில் சாரதிகளுக்கான ஓட்டுநர் உரிமம் பெற விரும்புவோருக்கு, தேர்வில் புதிய கேள்விகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
முட்டாள்கள் தினம்
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம். ஜேர்மானியர்கள் முட்டாள்கள் தினத்தில் ஏமாற்றுவதை தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்களாம். ஆகவே, நீங்களும் ஏமாற்றப்படாமல் தப்பிப்பதில் கவனமாக இருங்கள்.
Kurzarbeit திட்டம் நீடிக்கிறது
Kurzarbeit திட்டம் ஜூன் இறுதி வரை நீடிக்க உள்ளது. ஆனாலும், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அது குறித்து அறிந்துகொள்ள உங்களுக்குப் பணி வழங்குபவரை அணுகவும்.
சமூக பாதுகாப்புத் திட்டத்தில் சில மாற்றங்கள்
ஏப்ரலிலிருந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. மேலதிக விவரங்களை செய்தியின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு ஈஸ்டர் விடுமுறைகள்
இந்த மாதத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கு ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட உள்ளது. விடுமுறைக் கால அளவு மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
கோவிட் பயண விதிகள் விலக்கிக்கொள்ளப்படுமா?
சுகாதார அமைச்சக தகவலின்படி, தற்போதைய கோவிட் பயணச் சட்டம் ஏப்ரல் 28உடன் காலாவதியாகிறது. அது நீட்டிக்கப்படுமா என்பது இப்போதைக்குத் தெரியவில்லை.
கொரோனா சூழலைப் பொருத்து அது முடிவு செய்யப்படலாம்.