இன்று மன்னர் சார்லஸ் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்; ஆனால் அவருக்கு முழுமையான மகிழ்ச்சி இல்லையாம்
சார்லஸ் பிரித்தானிய மன்னராக முடிசூட்டி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால், மன்னர் முழு மகிழ்ச்சியுடன் இல்லை என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
மன்னர் சார்லஸ் வாழ்வில் ஒரு முக்கியமான நாள்
மகாராணி எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி, இளவரசர் சார்லஸ் மன்னராக முடிசூட்டப்பட்டார். அதாவது, அவர் முடிசூடி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

Credit: Getty
மன்னர் முழு மகிழ்ச்சியுடன் இல்லை
தான் மன்னராக முடிசூடி இன்று ஓராண்டு நிறைவடைந்தாலும், சார்லசுக்கு முழுமையான மகிழ்ச்சி இல்லையாம். அதற்குக் காரணம், அவருடன் இல்லாத அவரது அன்புத்தாயாரான எலிசபெத் மகாராணியும், அமெரிக்காவில் இருக்கும் அவரது அன்புப் பேரன் ஆர்ச்சியும்தான் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான Phil Dampier என்பவர்.
மன்னருடைய அன்புப் பேரக்குழந்தைகளான ஆர்ச்சியும் லிலிபெட்டும் அமெரிக்காவில் இருந்தும், அவர்களுடன் அளவளாவ முடியவில்லை என்னும் வருத்தம் மன்னருக்கு இருக்கத்தானே செய்யும் என்கிறார் அவர்.

Credit: Not known, clear with picture desk
அவ்வப்போது ஹரியும் மேகனும் வீடியோ அழைப்பு மூலம் பேரப்பிள்ளைகளைத் தன்னுடன் பேசவைத்தாலும், அது அவர்களை நேரில் சந்திப்பதற்கு ஈடாகாது என மன்னர் கருதுகிறார்.

Credit: Not known, clear with picture desk
இன்னொரு விடயம் என்னவென்றால், ஹரியுடன் மன்னர் தொலைபேசியில் பேசுவதுதான் வழக்கம். அதற்கொரு முக்கிய காரணமும் உள்ளது. வீடியோ அழைப்பில் பேசும்போது ராஜ குடும்பத்தை அவமதித்த மேகனையும் பார்க்க நேரிடலாம் என்பதால், மன்னர் சங்கோஜமாக உணர்கிறாராம்!

Credit: Getty

Credit: Netflix

Credit: News Group Newspapers Ltd

Credit: Getty

Credit: News Group Newspapers Ltd

Credit: Alamy

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |