சம்பள பட்டியலில் இருக்க வேண்டிய முக்கிய விடயங்கள் - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
நீங்கள் ஒரு புதிய வேலைக்கு செல்கின்றீர்கள் என்றால் கட்டாயம் உங்களுக்கு சம்பளம் வங்கியில் வைப்பு செய்யப்பட்டு, சம்பள பட்டியல் உங்களிடம் வழங்கப்படும்.
சம்பள பட்டியலானது உங்கள் சம்பளம் தொடர்பான மொத்த விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இந்த சம்பள பட்டியலை வைத்து வேறு ஒரு புதிய நிறுவனத்தில் உங்களது சம்பளமானது தீர்மானிக்கப்படும்.
சம்பளம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் இந்த பட்டியலை வைத்து தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
எனவே உங்களுக்கு வழங்கப்படும் சம்பள பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய விடயங்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.
அடிப்படை சம்பளம் (Basic salary)
சம்பள பட்டியலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான விடயமாக இருப்பது உங்களது அடிப்படை சம்பளமாகும். ஏனென்றால் உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து பலன்களும் உங்களின் அடிப்படை சம்பளத்தை வைத்து மட்டுமே வழங்கப்படுகிறது.
அடிப்படை சம்பளமானது மொத்த சம்பளத்தில் 35 முதல் 50 சதவீதம் வரை இருக்கலாம். இந்தப் பணம் வரிக்கு உட்பட்டது.
வீட்டு வாடகை கொடுப்பனவு (House Rent Allowance - HRA)
வீட்டு வாடகை கொடுப்பனவு என்பது உங்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சம்பளத்தை வைத்து வழங்கப்படுகிறது. அடிப்படை சம்பளத்தில் 40 முதல் 50 சதவீதம் வீட்டு வாடகை கொடுப்பனவாக வழங்கப்படும். இது சம்பள பட்டியலில் இருக்கக்கூடிய பெரும்பான்மையான வரிக்கு உட்பட்ட ஒரு பகுதியாகும்.
அகவிலைப்படி (Dearness Allowance - DA)
அகவிலைப்படி என்பது உங்களின் அடிப்படை சம்பளத்தை வைத்து மாறுபடும். ஆனால் அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது மீண்டும் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டு, 50% -இன் படி வேலையாட்களுக்கு கிடைக்க வேண்டிய பணயத்திக் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். தாவது குறைந்தபட்ச சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
போக்குவரத்து கொடுப்பனவு (Conveyance allowance)
வேலை சம்பந்தமான பயணத்தை நீங்கள் மேற்கொள்கின்றீர்கள் என்றால் உங்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு வழங்கப்படும். அவ்வாறன பயணத்திற்கு நீங்கள் செலவு செய்யும் பணமானது நீங்கள் வாங்கும் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும்.
உதாரணமாக, உங்களுக்கு 1600 ரூபாய் வரை போக்குவரத்து கொடுப்பனவு கிடைக்கிறது என்றால் அதற்கு நீங்கள் எந்த ஒரு வரியும் செலுத்த தேவையில்லை.
பயணக் கொடுப்பனவு (Leave Travel Allowance)
பயணக் கொடுப்பனவு என்பது LTA என்று அழைக்கப்படுகிறது. இது வேலையாட்களுக்கும் அவர்களுது குடும்பம் வேறு எங்காவது பயணம் செய்யும் போது வழங்கப்படும். LTA இன் கீழ் பெறப்படும் பணத்திற்கு வரி கிடையாது. இது உங்களது நிறுவனத்தின் HR மற்றும் பொருளாதார துறையால் நிர்ணயிக்கப்படுகிறது.
மருத்துவ கொடுப்பனவு (Medical Allowance)
நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது மருத்துவ செலவுகளுக்கு மருத்துவ கொடுப்பனவு வழங்கப்படுகிறது. நீங்கள் மருத்துவ செலவுகளுக்கான சான்றாக மருத்துவமனையில் வழங்கப்பட்ட பற்றுசீட்டை நிறுவனத்திடன் சமர்பித்து, பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு வரி செலுத்த தேவையில்லை.
சிறப்பு கொடுப்பனவு (Special allowance)
வேலை செய்யும் பணியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக சிறப்பு கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது. இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஆனால் இந்த தொகை முற்றிலுமாக வரிக்கு உட்பட்டது.
செயல்திறன் போனஸ் (Performance Bonus)
நீங்கள் வேலையில் உங்கள் திறனை எப்படி காட்டுகின்றீர்கள் என்ற அடிப்படையில் இது வழங்கப்படுகிறது. வேலை பார்க்கும் திறனின் அடிப்படையில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ வழங்கப்படும். இது அந்நிறுவனமே முடிவு செய்து வழங்கும்.
வருங்கால வைப்பு நிதி (Provident Fund)
வருங்கால வைப்பு நிதி ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும். இது அடிப்படை சம்பளம் மற்றும் DA -வில் 12 சதவீதம் ஆகும்.
தொழில்முறை வரி (Professional tax)
உங்களுடைய வரி வரம்பின் அடிப்படையில் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி தொழில்முறை வரியாக பிடிக்கப்படுகிறது. இது ஒரு மறைமுக வரியாகும்.
இந்த வரியானது கர்நாடகா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், அசாம், சத்தீஸ்கர், கேரளா, மேகாலயா, ஒடிசா, திரிபுரா, ஜார்கண்ட், பீகார் மற்றும் மத்திய பிரதேஷ் போன்ற மாநிலங்களில் மட்டும் செல்லுபடியாகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |