பிரித்தானியாவின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து வெளியான முக்கிய தகவல்! ஆய்வில் தெரியவந்த பலன்
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கொரோனா தொற்று பரவுவதை 67% குறைக்கலாம், மேலும் மூன்று மாதங்கள் பாதுகாப்பானது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு-AstraZeneca தடுப்பூசி கொரோனா வைரஸைப் பரப்புவதில் ‘கணிசமான விளைவை’ ஏற்படுத்தக்கூடும், மேலும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையில் மூன்று மாதம் பாதுகாப்பைக் குறைக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், தடுப்பூசி போட்டவர்களில் கொரோனா தொற்று 67% குறைந்தது காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டப்பிறகு 22 ஆம் நாள் முதல் 90 ஆம் நாள் வரை 76% பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.
அதாவது முதல் மற்றும் இரண்டாவது டோஸுக்கு இடையிலான மூன்று மாதங்களில் பாதுகாப்பு குறையாது என குறிப்பிட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குறித்து ஆய்வு முடிவு ஓர் நற்செய்தி என நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு-AstraZeneca தடுப்பூசி மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும் என்று மாட் ஹான்காக் கூறினார்.