இந்த ஆண்டு உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்வோருக்கு ஒரு முக்கிய தகவல்
பிரித்தானியாவில் செப்டம்பர் மாதம் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் துவங்க உள்ளன. இந்நிலையில், உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்வோர், சமீபத்தில் அரசு கொண்டு வந்த மாற்றங்களை கருத்தில் கொள்வது நல்லது.
பிரித்தானிய அரசு கொண்டுவந்துள்ள விதி மாற்றங்கள்
மார்ச் மாதத்தில், அப்போதைய பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி, பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறுவது தொடர்பில் மீளாய்வு ஒன்றிற்கு அழைப்புவிடுத்திருந்தார்.
புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டி, மே மாதம் 14ஆம் திகதி மீளாய்வின் முடிவுகளை சமர்ப்பித்தது.
மீளாய்வின் முடிவுகள், பட்டப்படிப்பு படிப்பதற்காக சர்வதேச மாணவர்கள் பிரித்தானியா விசா பெறும் முறை மூலமாக, அதிக அளவில் இந்திய மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக தெரிவித்தன.
அதே நேரத்தில், பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் வருவாய், உள்ளூர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதாலும், ஆராய்ச்சிகளுக்கு நிதி வழங்குவதாலும் ஏற்படும் இழப்புகள் ஆகியவற்றை சந்திக்க, சர்வதேச மாணவர்கள் செலுத்தும் கல்விகட்டணம் முக்கிய பங்கு வகிப்பதாகவும் மீளாய்வு முடிவுகள் தெரிவித்தன.
விதி மாற்றங்கள்
ஆகவே, பிரித்தானிய அரசு, சர்வதேச மாணவர்கள் பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வருவது தொடர்பாக சில விதி மாற்றங்களை அறிவித்தது.
அவை, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ளன. அதன்படி, பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரை அழைத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், முதுகலைப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும், முனைவர் பட்டம் பெறுவதற்காக வரும் மாணவர்களுக்கும் இந்த புதிய விதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள், பிரித்தானியாவுக்கு கல்வி கற்க வரும்போது, தங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துவரலாம்.
ஆகவே, உயர் கல்வி கற்பதற்காக பிரித்தானியா செல்லும் சர்வதேச மாணவர்கள் அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை கருத்தில் கொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |