க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
வழங்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
சாதாரண தர பரீட்சைக்கான வினாத்தாள் விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பின்னர் பரீட்சை நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், சீரற்ற காலநிலையில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்வு நிலையத்திற்கு மழை பெய்வதன் காரணமாக வர முடியாத மாணவர்கள் 17 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வருட பரீட்சையில் 459,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். 3527 பரீட்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் நேற்று இரவு 12 மணியில் இருந்து மேலதிக பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |