பாஸ்போர்ட் தொடர்பில் கனடா அமைச்சர் தெரிவித்துள்ள முக்கிய தகவல்
கனடாவின் குடும்பநலன், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர், இப்போதைக்கு யாரும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கவேண்டாம் என்று கூறியுள்ளார்.
கனேடிய அமைச்சரின் ஆலோசனை
கனடாவின் குடும்பநலன், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரான Karina Gould, கனேடியர்களுக்கு என்னுடைய ஒரு மிகச்சிறந்த ஆலோசனை என்னவென்றால், இப்போதைக்கு யாரும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கவேண்டாம் என்பதுதான் என்கிறார்.
இப்போதைக்கு உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படப்போவதில்லை என்று கூறும் Karina Gould, இப்போது அது தொடர்பான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிப்பீர்கள் என்றால், வேலை முடியும் வரை அவற்றை நீங்கள் திரும்பப் பெறமுடியாது என்கிறார்.
காரணம் இதுதான்
அதாவது கனடாவில், பாஸ்போர்ட் அலுவலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆகவே, புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தாலும் சரி, அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் அளித்தாலும் சரி, இப்போதைக்கு பலன் ஏதும் கிடைக்கப்போவதில்லை.
துரதிர்ஷ்டவசமாக, பாஸ்போர்ட் சேவை அத்தியாவசிய சேவையாக கருதப்படாததால், மனிதநேய அல்லது அவசர கால சூழல்கள் தவிர்த்து, வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும்வரை புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தாலும் சரி, அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக் கோரி விண்ணப்பம் அளித்தாலும் சரி, இப்போதைக்கு அவை பரிசீலிக்கப்படப்போவதில்லை என்கிறார் அமைச்சர்.