பிரித்தானியாவில் வாகனம் ஓட்டுவோருக்கு ஒரு முக்கிய தகவல்
பிரித்தானிய சாலைகளில் வார இறுதி நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால், பயணங்களைத் தவிர்க்குமாறு பிரித்தானிய சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சாரதிகளுக்கு ஒரு முக்கிய தகவல்
பிரித்தானிய தானியங்கி சேவைகள் நிறுவனமான RACயும், போக்குவரத்து ஆய்வமைப்பான Inrixம், கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, வார இறுதி நாட்களில் முக்கியமான நெடுஞ்சாலைகளில் பயணத்தைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை அறியுறுத்தியுள்ளன.
புதன்கிழமை முதல் கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாளான 24ஆம் திகதி வரை, சுமார் 29. 3 மில்லியன் பேர் சாலைகளில் பயணிக்கக்கூடும் என இந்த ஆய்வமைப்புகள் கணித்துள்ளன.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மதியம் 1.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை போக்குவரத்து மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற இருப்பதால், சாலை வழியாக பயணிப்போர் எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புள்ளது.
ஆக, பயணிப்போர், போக்குவரத்து நிலைமையை கவனித்து அதற்கேற்ப நடந்துகொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |