வெளிநாட்டில் இருந்து திரும்பும் இலங்கை மக்களுக்கு தடுப்பூசி தொடர்பில்... முக்கிய அறிவிப்பு
இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்ட இலங்கை மக்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வர எந்த வித முன்பதிவுகளும் தேவையில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழு தடுப்பூசி செலுத்தி கொண்ட இலங்கையர்கள், அவர்களின் குடியுரிமை பாஸ்போர்டை பயன்படுத்தி இலங்கைக்கு வரலாம் என்றும் ஆனால் அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தி இருக்க வேண்டும் என்று CAASL கூறியுள்ளது.
கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பயணிகள் இலங்கை வருவதற்கு வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து முன் பதிவு பெற வேண்டியதில்லை.
இரண்டு வயது முதல் பதினெட்டு வயது வரையிலான தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் இலங்கைக்கு வந்த பிறகு சுகாதார அமைச்சகத்தின் அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறை அல்லது அரசு துறை ஆய்வகத்தில் ஏழாம் நாள் கோவிட் -19 PCR பரிசோதனைக்கு கட் டாயமாக உட்படுத்தப்பட வேண்டும்.