பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு வாழிட உரிம அட்டை தொடர்பில் ஒரு முக்கிய தகவல்
பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்கள் ‘carte de sejour’ என்னும் பிரெஞ்சு வாழிட உரிம அட்டை வைத்திருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், 2021 மே 1ஆம் திகதி முதல், வாழிட உரிம அட்டை கோரி விண்ணப்பிப்போர் அனைவரும் ஒன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆம், இனி வாழிட உரிம அட்டை கோரி விண்ணப்பிப்போர் ஒன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம், அலுவலகம் சென்று நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
திடீரென எதனால் இந்த மாற்றம் என்றால், உண்மையில் நான்கில் ஐந்து பேர் இணையம் வாயிலாக விண்ணப்பிக்க கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ஐந்தில் ஒருவர் வீட்டில் கணினி இல்லை. உடல் மற்றும் மனநல குறைபாடுகள் கொண்டோர், காவலில் இருப்போர் மற்றும் வெளிநாட்டவர்கள் இணையம் வாயிலாக விண்ணப்பிப்பதை கடினமாக இருப்பதாக தெரிவிக்க, சிலருக்கோ அது முற்றிலும் இயலாத விடயமாகவே இருந்துள்ளது.
ஆகவே, பிரான்ஸ் நாட்டு சட்டத்தரணிகள், புலம்பெயர்தல் அமைப்புகள், இந்த வாழிட உரிம அட்டை கோர, ஒன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற விதிக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.
வாழிட உரிம அட்டை கோர, ஒன்லைன் வாயிலாக மட்டுமின்றி, நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கும் வகையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என அவர்கள் வாதிட்டுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, இனி வாழிட உரிம அட்டை கோர, ஒன்லைன் வாயிலாக மட்டுமின்றி, நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.