ரஷ்யாவிடம் ஆயுதங்கள் காலி?: பிரித்தானியா தெரிவித்துள்ள முக்கிய தகவல்
ரஷ்யாவிடம், உக்ரைனில் போரைத் தொடர்வதற்குத் தேவையான ஏவுகணைகள் காலியாகிவரலாம் என்றும், உக்ரைனைக் கைப்பற்றும் விடயத்தில் தோல்வியடைந்ததால் தங்களை புடின் துரத்திவிடுவாரோ என்ற பயத்தில் ரஷ்ய இராணுவத் தளபதிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய பதுகாப்புத்துறை அலுவலர்களின் தலைவரான அட்மிரல் Sir Tony Radakin கூறும்போது, உக்ரைனில் எப்படியாவது, ஏதாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற அழுத்தம் ரஷ்யாவில் காணப்படுவதாகவும், ஆனால், 10 வாரங்கள் போர் நடந்துள்ள நிலையில், ரஷ்யப் படைகள் பயன்படுத்திய ஏவுகணைகளையும் மற்ற ஆயுதங்களையும் பார்க்கும்போது, புடினிடன் ஆயுதங்கள் காலியாகி வரலாம் என்றும் கூறியுள்ளார்.
அதேபோல, பிரித்தானிய பாதுகாப்புச் செயலரான Ben Wallaceம், உக்ரைனில் வெற்றி பெற முடியாததால் ரஷ்ய இராணுவத் தளபதிகள், தோல்விக்கு ஒருவர் மீது ஒருவரை காரணம் காட்டி குற்றம் சாட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், புடினுடைய உக்ரைன் தோல்விக்கு ரஷ்யாவின் உயர் மட்ட அதிகாரிகள் பலிகடா ஆக்கப்பட்டு வருவதாகவும், உக்ரைனைக் கைப்பற்றும் விடயத்தில் தோல்வியடைந்ததால் தங்களை புடின் துரத்திவிடுவாரோ என்ற பயத்தில் ரஷ்ய இராணுவத் தளபதிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.