உலகக்கோப்பையில் இலங்கைக்கு இன்று முக்கியமான போட்டி!
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய உலகக்கோப்பை போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 8 இடங்களுக்குள் வர வேண்டும்.
உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை - வங்கதேசம் அணிகள் டெல்லியில் மோதுகின்றன.
வங்கதேசம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இலங்கை அணிக்கும் வாய்ப்பு குன்றியுள்ளது.
ஆனாலும் இப்போட்டி இலங்கை அணிக்கு முக்கியமானது. ஏனென்றால், நடப்பு உலகக்கோப்பை தொடரின் முடிவில் டாப் - 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற முடியும்.
தற்போது இலங்கை அணி 7வது இடத்தில் இருந்தாலும், வங்கதேசத்துடன் தோல்வியுற்றால் தொடரின் முடிவில் 8 இடங்களுக்கு கீழே செல்லும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
5 விக்கெட் வீழ்த்திய என் அன்பார்ந்த கணவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜடேஜாவின் மனைவி நெகிழ்ச்சி பதிவு
எனவே, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு மிக முக்கியமாகும். மேலும் தனது கடைசி போட்டியில் சவாலான நியூசிலாந்தை இலங்கை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
AP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |