Smartphone வைத்துள்ளீர்களா? அப்போ இந்த வகை ஆப்ஸ்லாம் உங்ககிட்ட இருக்கான்னு உடனே பாருங்க
ஸ்மார்ட்போன்கள் வைத்திராத நபர்களை காண்பதே அரிது என்றாகிவிட்டது. அந்தளவுக்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு உலகளவில் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போனை எவ்வாறு ஸ்மார்ட்டாக உபயோகப்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் அதற்கு நாம் செலவிட்ட முதலீடும்.
தவிர இப்போது இருக்கும் காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் நேரில் சென்று அலைய முடியாது. அதனால் கூடுமானவரை ஸ்மார்ட் போனிலேயே செய்ய முடியும் விஷயங்களுக்கு சில ஆப்ஸ்கள் மிகவும் முக்கியம்.
நீங்கள் ஸ்மார்ட் போன் வைத்திருந்தீர்கள் என்றால் கீழே கொடுத்திருக்கும் முக்கியான ஆப்ஸ்களில் எவை உங்களுக்கு தேவை என்றுபார்த்து இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்
ஆன்டி வைரஸ்
எந்த மொபைல் ஆனாலும் சரி தற்போது மொபைல் டேட்டாவை அதிகம் பயன்படுத்துகிறோம். இதனால் மிக எளிதில் நமது மொபைல் வைரஸால் பாதிப்படைவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் போன்ற நல்லதொரு ஆன்டி வைரஸ் பயன்படுத்துங்கள்.
இ - வாலட்
இ-வாலட் ஆப்ஸ்கள் தற்போது அதிகம் வரத் தொடங்கியுள்ளன கூகுள்-பே, பே.டி.எம், போன்-பே, மோபிவிக், ஃப்ரேசார்ஜ் போன்று நிறைய ஆப்ஸ்கள் வந்துள்ளன. முன்பெல்லாம் இதிலேயே பணம் போட்டு வைக்க வேண்டும் ஆனால் இப்போது யூ.பி.ஐ மூலம் உங்களது பேங்க் அக்கவுட்டை லிங்க் செய்துவிட்டால் பேங்கில் இருந்தே பணத்தை உபயோகிக்கலாம்.
பேங்கிங் ஆப்ஸ்
பேங்க் வேலைகளை ஆன்லைனில் செய்ய பயமாக இருந்தாலும் உங்களது பண பரவர்த்தனைகளை கண்காணிகவாவது உங்களது பேங்க் ஆப்ஸ் கைவசம் இருப்பது நல்லது.
பயணங்களுக்கு
வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் ஓலா, ஊபர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். ஆனால் இன்றும் முதியவர்கள், வீட்டில் இருப்பவர்கள் பெரிதாக பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு ஆட்டோ எப்படி புக் செய்வது என்று சொல்லிக்கொடுங்கள். அவர்களுக்குதான் அதிகம் தேவைபடுகிறது. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு செல்வதற்குகூட 100 ரூபாய்க்கு குறைந்து ஆட்டோக்கள் வருவதில்லை.
ப்ரௌசர்கள்
தற்போது வரும் மொபைல்களில் கூகுள் குரோம் டீபால்ட்டாகவே இருக்கிறது. அப்படி இல்லை என்றால் கூகுள் குரோம், ஓபரா மினி ப்ரௌசர் (Opera Mini Browser) போன்ற ஏதேனும் நல்ல பிரவுசர்களை பயன்படுத்தவும்.
ஷாப்பிங் ஆப்ஸ்
இன்று அனைவருமே ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம் காட்டுகிறார்கள். கடைக்கு சென்று வாங்க நேரம் இல்லாதவர்களும் சரி இல்லை கடையில் இருக்கும் அதே பொருளை அதிக ஆஃபரில் வாங்க விரும்புபவர்களும் சரி ஷாப்பிங் ஆப்ஸ்களுக்கு எப்போதுமே அதிக டிமாண்ட் உண்டு.
சோஷியல் மீடியா ஆப்ஸ்
இதனை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாதுதான். கண்டிப்பாக டெஸ்க்டாப்பில் பயன்படுத்துவதை விட மொபைலில் தான் நாம் சோஷியல் மீடியாக்களில் அதிகம் பயன்படுத்துகிறோம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அதனால் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியா ஆட்களுக்கு அதன் ஆப்ஸ் மொபைலில் இருப்பது அவசியம் தானே? ஆனால், டெக்டாப்பில் ஃபேஸ்புக் திறந்தால், பேஜில் போஸ்ட் போடலாம், இன்பாக்ஸ் திறந்து மெசேஜ் தட்டலாம், போனில் அனைத்துக்கும் தனித்தனி ஆப்ஸ். எது வேண்டுமோ அதனை மட்டும் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
மெசேஜ் ஆப்ஸ்
கண்டிப்பாக இப்போதிருக்கும் ஜென் - Z தலைமுறையினருக்கு எஸ்.எம்.எஸ் செய்வதே தெரியாமல் கூட இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். முன்பு ஒரு நாளைக்கு 100 மெசேஜ் என்று கணக்குப் பார்த்து அனுப்பியதெல்லாம் 90 ஸ் கிட்ஸுக்குதானே தெரியும். வாட்-ஸப் போல, டெலிகிராம், ஹைக், ஸ்நாப் சேட், வைபர் போன்ற பல்வேறு விதமான மெசேஜ் ஆப்ஸ் இருக்கிறது.