சுவிட்சர்லாந்தில் நாய் வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு... வித்தியாசமான காரணம்
சுவிட்சர்லாந்தில் நாய் வைத்திருப்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு, சுவிஸ் காடுகளில் நாய்களை ஓடவிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால், நாம் என்ன நினைப்போம். அதாவது, காட்டு மிருகங்கள் நாய்களைத் தாக்கிவிடக்கூடாது. அவற்றை காட்டு மிருகங்களிடமிருந்து காப்பாற்றுவதற்ககாத்தான் இந்த உத்தரவு என்றுதானே எண்ணுவோம்.
ஆனால், விடயம் அப்படி அல்ல.
காட்டு மிருகங்கள் நாய்களால் தாக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பின்னணியிலுள்ள உண்மை
சுவிட்சர்லாந்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 570 காட்டு மிருகங்கள் நாய்களால் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 88 சதவிகித விலங்குகள், மான்கள். குறிப்பாக இளம் மான்கள் தப்பி ஓட முடியாமல் எளிதாக நாய்களால் கொல்லப்பட்டுள்ளன.
ஆகவே, நாய்களை, கட்டாயமாக கழுத்தில் அவற்றிற்கான பெல்ட் போட்டு, கையில் பிடித்துக்கொண்டுதான் செல்லவேண்டும் என்னும் கட்டுப்பாடு சூரிச் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் அமுலுக்கு வந்துள்ளது, அது ஜூலை மாத இறுதி வரை அமுலில் இருக்கும்.
Neuchâtel மாகாணத்தில், ஏப்ரல் 15 முதல் ஜூன் 30 வரை இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. Fribourg, ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களில் ஏப்ரல் 1 முதல் ஜூலை 15 வரை நாய்களை கழுத்தில் பெல்ட் அணிந்து கையில் பிடித்து அழைத்துச் செல்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.