கனடாவுக்கு புலம்பெயர உதவும் ஒரு முக்கியமான திட்டம் குறித்து அறிந்துகொள்வோம்
கனடாவில் 1967ஆம் ஆண்டு, முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல், பெருந்தொற்று காலகட்டம்வரை, அதிக அளவில் வெளிநாட்டவர்கள் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு உதவியாக இருந்த திட்டம், திறன்மிகு பணியாளர் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கனேடிய பணி அனுபவமோ அல்லது கனடாவிலிருந்து வேலைக்கான அழைப்போ இல்லாமலே கனடாவில் பணி செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது என்பதுதான்.
இந்த திறன்மிகு பணியாளர் திட்டம் மூலமாக கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...
1. திறன்மிகு பணியாளர் திட்டத்திற்கான தகுதிநிலை வரைமுறை
திறன்மிகு பணியாளர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கு நீங்கள், கடந்த 10 ஆண்டுகளில், கனடாவின் தேசிய தொழில் வகைப்பாட்டின் திறன் மட்டத்தில், 0, A அல்லது B என வகைப்படுத்தப்பட்ட ஒரு திறன்மிகு தொழிலை தொடர்ச்சியாக ஓராண்டு அல்லது அதற்கு இணையாக செய்திருக்கவேண்டும்.
உங்கள் மொழித்திறன், கனேடிய மொழித் தகுதியின் அளவுகோலின்படி (Canadian Language Benchmark, CLB) ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் 7ஆக இருக்கவேண்டும்,
மற்றும், நீங்கள் பணிக்கான முறையான கல்வித்தகுதி பெற்றவராகவும் இருக்கவேண்டும்.
மேலும் நீங்கள், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் ஆறு புலம்பெயர்தல் தேர்வு காரணிகளில் (IRCC’s six immigration selection factors) குறைந்தபட்சம் 67 புள்ளிகள் பெற்றிருக்கவேண்டும்.
2. ஒரு எக்ஸ்பிரஸ் நுழைவு புரோஃபைலை உருவாக்கி, அதை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தில் சமர்ப்பியுங்கள்.
3. நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு வந்துள்ளதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.
4. நிரந்தர வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு வந்தால், புலம்பெயர்தலுக்கு விண்ணப்பியுங்கள்.
மேலதிக விவரங்களுக்கு... https://www.cicnews.com/2022/04/how-to-immigrate-through-canadas-federal-skilled-worker-program-0424780.html#gs.yoznhi