சுவிட்சர்லாந்தில் உள்ள வயதானவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்து வயதானவர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளும் படி நாட்டின் மூத்த குடிமக்களுக்கான கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
தொற்றுநோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு இது ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்கும் என்று சுவிஸ் மூத்த குடிமக்களுக்கான கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.
புதன்கிழமை 90 வயதான பெண் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட முதல் நபராக ஆனார்.
எதிர்வரும் வாரங்களில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் மூத்த குடிமக்களுக்கான கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டதை அறிந்து கவுன்சில் மிகவும் நிம்மதியடைந்தது.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் மத்திய கவுன்சில் மற்றும் மத்திய பொது சுகாதாரத்தை கவுன்சில் ஆதரித்தது.
கொரோனாவால் வயதானவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இதுவரை பதிவான 6,500 கொரோனா வைரஸ் இறப்புகளில், கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்களை உள்ளடக்கியுள்ளனர் என சுவிஸ் மூத்த குடிமக்களுக்கான கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.