Smart phone புதிதாக வாங்க போறீங்களா? அதற்கு முன்னர் மறக்காம இதெல்லாம் கவனிங்க
புதிது புதிதாக ஸ்மார்ட் போன்கள் சந்தையில் வந்த வண்ணம் உள்ளது.
நாம் புதிதாக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கும் போது அதற்கு முன்னர் சில விடயங்களை கவனிக்க வேண்டும்.
ஸ்மார்போன் பாடி
செல்போன் எதனால் தயாரிக்கப்பட்டிருப்பது என்பதை கவனிக்க வேண்டும். மெட்டல் பாடி கொண்ட மொபைல்கள் உறுதியானதாக இருக்கும். தற்போது, பல ப்ரீமியம் போன்களும் மெட்டல் பாடியுடன் தான் வருகின்றன. மெட்டல் பாடி பட்ஜெட் மொபைல்கள் மூலம் சில நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர முயல்கின்றன. சில மொபைல்கள் செமி மெட்டல் பாடியுடன் கிடைக்கின்றன.
டச் ஸ்கிரீன் அளவு
தொடுதிரையின் அளவு மற்றும் துல்லியத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். HD, Full HD திரைகள் பல ஸ்மார்ட் போன்களில் உள்ளன. Full HD திரை துல்லியமாக வண்ணங்களைக் காட்டும். கைக்க்கு அடக்கமாக பயன்படுத்த அதிகபட்சம் 5 இன்ச் அளவுள்ள திரை இருந்தால் போதும். அதற்கு மேல் போனால் கைக்குள் அடங்காமல் நழுவும் வாய்ப்பு உண்டு. ஆனால், வீடியோ பார்ப்பதற்கு மொபைலை அதிகம் பயன்படுத்துபவர்கள் 5.5 முதல் 6.5 இன்ச் வரையுள்ள மொபைலை வாங்கலாம்.
ப்ராசெஸர்
ஸ்மார்ட் போனின் திறனை அறிந்துகொள்ள மிகவும் உதவும். அதிகமாக இன்டெர்நெட் பயன்படுத்துபவர்கள், அதிகமாக கேம் விளையாடுபவர்கள் ஸ்னாப்ட்ராகன் ப்ராசெஸர் உள்ள மொபைல்களை வாங்கலாம்.
கேமரா
கேமரா எத்தனை மெகா பிக்ஸல் கொண்டது என்று பார்ப்பதை விட அதில் அப்ரேச்சர், ஐ.எஸ்.ஓ., ஆட்டோ ஃபோக்கர் ஆகியவை பற்றி அறிவது அவசியம். மெகா பிக்ஸல் அளவு அதிகரிக்கும் போது புகைப்படத்தின் அளவும் அதிகரிக்கும். அப்ரேச்சரைப் பொறுத்தவரை, குறைந்த வெளிச்சத்திலும் துல்லிமான படங்களுக்கு f/2.0 அல்லது குறைவான அப்ரேச்சர் தேவை. மெகா பிக்ஸல் 12 முதல் 16 வரை இருக்கலாம். 8 முதல் 12 மெகா பிக்ஸலுக்குள் f/2.0 முதல் f/2.2 அப்ரேச்சர் கொண்ட மொபைலிலும் நல்ல படங்களை எடுக்கலாம்.
பேட்டரி
நீடித்து நிற்கும் பேட்டரி கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சம். இதை கவனிக்காமல் ஸ்மார்ட் போன் வாங்கினால் அடிக்கடி ப்ளக் போர்டை தேடிக்கொண்டிருக்க நேரும். குறைந்தபட்சம் 3500mAh பேட்டரி இருந்தால் நலம்.
மெமரி
இன்டேனல் மெமரி (Internal Memory) அல்லது ரோம் (ROM) அளவு 16GB, 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றில் கிடைக்கிறது. குறைந்தபட்சம் 16GB மெமரி கொண்ட மொபைல் வாங்குவது நல்லது.