ஜேர்மன் சேன்ஸலர் தலையீட்டால் பிரெக்சிட் ஒப்பந்த பிரச்சினையில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்
பிரெக்சிட் ஒப்பந்தம் சுமூகமாக நிறைவேற, ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் முக்கிய பங்காற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு வாரம் முன்பு வரை, பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில், பிரெக்சிட் தொடர்பில் நல்லதொரு ஒப்பந்தம் ஏற்படுமா என்ற விடயம் சந்தேகத்திற்குரியதாகவே இருந்த நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கடைசி நேர தலையீட்டால் ஒப்பந்தங்கள் அற்ற பிரெக்சிட் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்த கொள்கைகள் கொண்டவை என்று கூறிய மெர்க்கல், ஒப்பந்தம் ஒன்றை நாம் எட்டாவிட்டால், உலகம் நம்மைக் குறித்து நல்ல விதமாக எண்ணும் வாய்ப்புக்கு அது தடையாக இருக்கும் என்பது போன்ற ஒரு கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அவரது ஆலோசனையின் பேரிலேயே, கடைசி நேரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரும், ஜேர்மன் அரசியல்வாதியுமான Ursula von der Leyen தலையிட்டு சுமூகமான ஒப்பந்தம் ஒன்று நிறைவேற உதவியிருக்கிறார்.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனும், Ursula von der Leyenம் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பது குறித்து தொடர்ந்து தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டே இருந்ததை குறிப்பிடாமல் இருக்கமுடியாது.
ஒப்பந்தத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த ஐரோப்பிய ஒன்றிய தரப்பு பிரதிநிதியான Barnierஐ ஓரம் கட்டி, Ursula நல்ல ஒப்பந்தம் ஒன்று நிறைவேற நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

