கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதியில் வாழும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய எச்சரிக்கை
கடற்பரப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கையானது கற்பிட்டியில் இருந்து கொழும்பு(Colombo), காலி(Galle) மற்றும் ஹம்பாந்தோட்டை(Hambandota) ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புக்களில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இங்கு கடல் அலைகள் மேலெழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்பில் 2.5 மீற்றர் முதல் 3 மீற்றர் வரையான உயரத்திற்கு கடல் அலை மேலெழக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் வெப்பநிலை காரணமாக பலரும் கடற்கரையில் இருந்து வருகின்றனர். இதனால் கடற்கரைக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளதால் கூடிய கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |