இம்ரான் கானுக்கு நான்காவது மனைவியாக ஆசை: லண்டன் பெண் வைரல் வீடியோ
பல இன்னல்களை சந்தித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மீண்டும் திருமண வரன் வந்துள்ளது.
இம்ரான் கணை திருமணம் செய்ய ஆசைப்படும் லண்டன் பெண்
ஜியா கான் எனும் லண்டன் டிக்டோக் பிரபலம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கணை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
ஜியா இம்ரானை திருமணம் செய்து கொண்டு அவரது வாழ்க்கையில் மீண்டும் கவர்ச்சியை கொண்டு வர விரும்புவதாக கூறுகிறார்.
இம்ரானின் வாழ்க்கையில் திளாமர் காணாமல் போனது தான் இம்ரானின் பிரச்சனைகளுக்கு காரணம் என்கிறார் ஜியா.
TikTok
ஜியாவின் வைரல் வீடியோ
ஜியா ஒரு வீடியோவில் இம்ரான் கானின் நான்காவது மனைவியாக மாறத் தயார் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரானுக்கு 70 வயதாஜிறது என்பது கூட அவரூக்கு முக்கியமில்லையாம்.
ஜியா தனது இந்த ஆசைக்கான காரணத்தையும் கூறியுள்ளார். இம்ரான் மற்றும் புஷ்ரா பிவியின் உறவை முறித்துக் கொள்ள விரும்புவதாகவும், சிம்ரனின் வாழ்க்கையில் கவர்ச்சியைக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் கூறினார்.
PTI
இம்ரான் முதலில் ஜெமிமாவை மணந்தார். அதன்பிறகு அழகான மற்றும் கவர்ச்சியான பெண் பத்திரிக்கையாளர் அவருக்கு மனைவியானார், ஆனால் தற்போது அவர் வாழ்க்கையில் மதம் பிடித்த மனைவி வந்துள்ளார் என கடுமையாக பேசியுள்ளார்.
உண்மையில் இம்ரான் கானுக்கு ஒரு குறும்புகார மனைவி தேவை என கூறுகிறார் ஜியா.
திருமணம் முறைப்படி நடக்கவில்லை
சமீபத்தில் பாகிஸ்தான் மதத் தலைவர் ஒருவர் இம்ரான் மற்றும் புஷ்ராவின் திருமணம் இஸ்லாம் மத முறைப்படி நடக்காவிலை என்று கூறியது குறிப்பிடத்தக்கது. அவரைப் பொறுத்தவரை, இந்த திருமணம் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கழ் செய்யப்படவில்லை. 2018-ல் தம்பதியினரின் இஸ்லாமிய திருமணத்தை நடத்திய மெளல்வி முகமது சயீத், இது புஸ்ரா பீபியின் இத்தாத் காலத்தில் நடந்ததாகக் கூறினார்.
பல சிரமங்கள் சூழ்ந்த இம்ரான் கான்
இம்ரான் கானைப் பொறுத்த வரையில் சமீபத்தில் சிரமங்கள் அதிகரித்து வருகின்றன. இம்ரான் கான் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் மே 9 அன்று ராணுவ தளங்களை தாக்தியதை அடுத்து தடையை எதிர்கொள்கிறது.
அரசாங்கத்தின் அடக்குமுறை இம்ரான் கானின் கட்சியை ஆழமான இருத்தலியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது , ஒவ்வொரு நாளும் கட்சியிலிருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். ஆனால், கட்சியில் தனியாக இருந்தாலும் தனது போராட்டம் தொடரும் என முன்னாள் பிரதமர் அறிவித்துள்ளார்.