75 ஆண்டுகள்.. ஒரே நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்ற 90 வயது பிரித்தானியர்! வியப்பூட்டும் தகவல்
பிரித்தானியாவில் 90 வயது முதியவர் ஒருவர் சுமார் 75 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் வேலை செய்து 90 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.
இங்கிலாந்து தென் மேற்கு பகுதியில் உள்ள குளோசெஸ்டர் நகரை சேர்ந்தவர் பிரையன் வெப்(90). இவர் கார் உற்பத்தி செய்யும் Vauxhall நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வந்துள்ளார்.
1946 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்திற்கு சென்று எதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டு முதலில் தொழில் பழகுநராக பணியில் சேர்ந்துள்ளார். அதன் பின் படிப்படியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கடந்த 34 ஆண்டுகளாக Warrenty Administrator ஆக பணியாற்றி வந்துள்ளார். பணி ஓய்வுக்கான காலம் வரும் பொழுது இன்னும் இரண்டு ஆண்டுகள் வேலை செய்கிறேன் என்று சொல்லி 25 ஆண்டுகள் மீண்டும் வேலை செய்துள்ளார்.
இது போன்று சுமார் 75 ஆண்டு காலம் தொடர்ச்சியாக ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இது குறித்து பிரையன் வெப் கூறியது, முதலில் இந்த வேலை எனக்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் அது நாளுக்கு நாள் பழக எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. வேலை செய்யும் போது நான் இளமையாக உணர்வேன். காலம் மாறி வருவதால் எனது வேலைக்கு ஓய்வு கொடுத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.