ஜேர்மனியில் திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்களால் பரபரப்பு: விமான நிலையம் மூடல்
ஜேர்மனியின் விமான நிலையம் ஒன்றின் ஓடுபாதையில் திடீரென நுழைந்த சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபர்கள், பருவநிலை ஆர்வலர்கள்!
திடீரென விமான ஓடுபாதையில் புகுந்த நபர்கள்
ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலைய ஓடுபாதையில் திடீரென நுழைந்த பருவநிலை ஆர்வலர்கள் சிலர், தங்களை தரையுடன் ஒட்டவைத்துக்கொண்டார்கள்.
Maximilian Schwarz/Reuters
அதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக விமானங்களின் வருகையும் புறப்பாடும் நிறுத்தப்பட்டது. 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
புவி வெப்பமயமாதலின் சுமார் 4 சதவிகிதத்துக்கு விமானங்கள்தான் காரணம் என்கின்றன ஆய்வுகள்.
Maximilian Schwarz/Reuters
The Last Generation என்னும் பருவநிலை ஆதரவு அமைப்பு, அரசாங்கங்கள், எரிபொருட்களாக எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை பயன்படுத்துவதை 2030அம் ஆண்டுவாக்கில் முடிவுக்குக் கொண்டு வரக்கோரி இத்தகைய அமைதிப்போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது.
தற்போது, மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |