பிரித்தானியாவில் வெறும் சொக்லேட்டை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள்: நினைவுகூரும் மன்மோகன் சிங்கின் மகள்
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிரித்தானியாவில் கல்வி பயின்றபோது, சில நேரங்களில் வெறும் சொக்லேட்டை மட்டும் உண்டு வாழ்ந்ததாக தெரிவிக்கிறார் அவரது மகள்.
வெறும் சொக்லேட்டை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த நாட்கள்
மன்மோகன் சிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்தவர் ஆவார்.
1950களில் தன் தந்தையான மன்மோகன் சிங் பிரித்தானியாவில் கல்வி கற்றபோது, சாப்பிட பணம் இல்லாததால் உணவைத் தவிர்த்துவிடுவார் என்கிறார் மன்மோகனின் மகளான டாமன் சிங்.
அல்லது, அவர் உணவுக்கு பதிலாக கேட்பரி சொக்லேட்டை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்த நாட்களும் உண்டு என்கிறார் டாமன்.
அத்துடன், தன் வாழ்நாள் முழுவதும் யாரிடமும் கடன் வாங்கியதில்லையாம் மன்மோகன் சிங்.
தன் தந்தையைக் குறித்து நினைவுகூரும் டாமன், அவருக்கு நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு என்றும், தனது நண்பர்களுடன் இருக்கும்போது, அவர்கள் பொருளாதார நிபுணர்களாக இருந்தால்கூட, ஜோக்கடித்து சிரிப்பதுண்டு என்கிறார் டாமன்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |