மனித சிறுநீரில் செல்போனுக்கு ஜார்ஜர்! பிரித்தானிய விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
இங்கிலாந்து விஞ்ஞானிகளின் சிறுநீர் மூலம் செல்போனை சார்ஜ் செய்யும் முறையை கண்டுபிடித்து சாதனை படைத்துளள்னர்.
இங்கிலாந்தின் பிரிஸ்டலில் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சேர்ந்து மனித கழிவுகளை மின்சாரமாக மாற்றும் புதிய சுத்தமான ஆற்றல் எரிபொருள் கலத்தை உருவாக்கியுள்ளனர்.
இதை வைத்து வீடுகளுக்கு ஒரு நாள் முழுவதும் மின்சாரம் அளிக்கலாம் மற்றும் செல்போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிளாஸ்டன்பரி திருவிழாவில் Pee Power திட்டத்தில் பகிரங்கமாக சோதனை செய்யப்பட்டது.
அப்போது விஞ்ஞானிகள் கழிப்பறைகள் நிலையான மின்சாரத்தை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் மொபைல் போன்கள், லைட் பல்ப்கள் மற்றும் ரோபோக்களை சார்ஜ் செய்ய பயன்படுத்த உதவுகிறது.
இதையடுத்து வீடுகளுக்கும் அந்த மின்சாரம் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிஸ்டல் பயோஎனர்ஜியின் இயக்குனர் கூறியது, இந்த கருவியின் மூலம் ஒரு வாட் லைட்பல்பை 300 மணிநேரம் அல்லது 10 லைட் பல்ப்களை 30 மணிநேரத்திற்கு இயக்க முடியும் என்று கூறியுள்ளார்.
ஒரு சராசரி மனிதன் ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை லிட்டர் வரை திரவ கழிவுகளை உற்பத்தி செய்கிறான்.
அதாவது ஐந்து பேர் கொண்ட குடும்பமாக இருந்தால் அது 10 முதல் 12 லிட்டர் சிறுநீர் வரை இருக்கும். ஒரு அளவிடப்பட்ட நுண்ணுயிர் எரிபொருள் செல் அமைப்புக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க இது போதுமானது என்று ஐரோபௌலோஸ் கூறுகிறார்.