சிறிது நேரத்தில் பதவியேற்பு விழா... ட்ரம்ப் என்ன செய்துகொண்டிருக்கிறார் பாருங்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இன்னும் சிறிது நேரத்தில் பதவியேற்க இருக்கிறார்.
78 வயதாகும் ட்ரம்ப், பதவியேற்பு நாளன்று இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருப்பார்?
சிறிது நேரத்தில் பதவியேற்பு விழா...
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பின் பதவியேற்பு விழா, இன்று, அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி காலை, உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு துவங்க இருக்கிறது.
12.00 மணிக்கு அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள இருக்கிறார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் நேரம் அதிகாலை மணி 7.00 மணி கூட ஆகவில்லை. இப்போது அவர் என்ன செய்துகொண்டிருப்பார்?
என்ன செய்துகொண்டிருக்கிறார் பாருங்கள்
🚨 NOW: President Trump is dancing to YMCA ON STAGE with the Village People
— Nick Sortor (@nicksortor) January 19, 2025
This is incredible! 🤣 pic.twitter.com/BIcIJyudr5
78 வயதாகும் ட்ரம்ப், பதவியேற்பு நாளன்று என்ன செய்துகொண்டிருப்பார்? தனது பதவியேற்பு விழாவுக்கான ஆயத்தங்களை துவங்கியிருக்கலாம், அல்லது வீட்டில் தயாராகிக்கொண்டிருக்கலாம் இல்லையா?
ஆனால், வாஷிங்டன் டிசியிலுள்ள Capitol One Arena என்னும் உள்ளரங்கத்தில் Village People என்னும் பிரபல பாடகர் குழு ஒன்று பிரபலமான YMCA என்னும் பாடலை பாடிக்கொண்டிருக்க, அதிகாலை 4.50 மணிக்கு, அந்த பாடகர் குழுவினருடன் அவ்வப்போது மெல்ல நடனமாடிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.
அதிகாலை நேரத்தில் அவர் நடனம் ஒன்றிற்கு ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருக்கும் வீடியோ சமூக ஊடகமான எக்ஸில் வெளியாக, ’இந்த வயதில் ஜனாதிபதிக்கு இவ்வளவு எனர்ஜியா?’ என அவரைப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |