கொரோனா சோதனை முடித்தால் ஊக்கத்தொகை... பிரபல சுவிஸ் நிறுவனத்தின் நடவடிக்கை அச்சுறுத்தல் என புகார்
சுவிட்சர்லாந்தில் Nestlé நிறுவனம் தங்கள் ஊழியர்களை கொரோனா சோதனைக்கு கட்டாயப்படுத்துவது அச்சுறுத்தும் நடவடிக்கை என சில ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் பிரபல நிறுவனமான Nestlé, இந்த கொரோனா நாட்களில் தங்களின் உற்பத்தியில் தடை ஏற்படக்கூடாது என கருதி ஊழியர்கள் அனைவரையும் கொரோனா சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டது.
அதன் ஒருபகுதியாக Schwyz மண்டலத்தில் Wangen பகுதியில் அமைந்துள்ள Nestlé ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியதுடன், கொரோனா சோதனை எடுத்துக்கொள்வது மிக முக்கியம் எனவும் குறிப்பிட்டது.
மட்டுமின்றி Nestlé நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் இலவசமாக கொரோனா சோதனையும் முன்னெடுத்துள்ளது.
மேலும், கொரோனா சோதனை முன்னெடுக்கும் ஊழியர்களுக்கு தலா 330 பிராங்குகள் ஊக்கத்தொகையும் அளித்தது.
ஆனால், Wangen பகுதியில் அமைந்துள்ள Nestlé ஊழியர்கள், இதை கட்டாயப்படுத்துவதாக உணர்ந்துள்ளனர்.
மட்டுமின்றி, கொரோனா சோதனை மேற்கொள்ளாத ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது ஒருவகை அச்சுறுத்தல் என்றே Wangen பகுதி ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
Nestlé நிறுவனம் கடந்த நவம்பர் முதல் தமது ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை அளித்து வௌகிறது.
ஆனால் தற்போது சோதனை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே அந்த தொகை என கூறுவது அச்சுறுத்தும் நடவடிக்கை என்றே Wangen பகுதி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் Nestlé நிறுவனம் இப்போது தமது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.
கொரோனா சோதனைக்கும் ஊக்கத்தொகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே அது.
இருப்பினும் Wangen பகுதி நிர்வாகம் தன்னிச்சையாக இந்த முடிவை அறிவித்தார்களா என்பது தொடர்பில் தெளிவாக்க Nestlé நிறுவனம் மறுத்துள்ளது.