பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் ரயில் ஓட்டுனருக்கு நேர்ந்த துயர சம்பவம்
பணி ஓய்வு பெறுவதற்கு கடைசி நாளில் வேலையை முடித்துவிட்டு குடும்பத்தினரை சந்திக்க காத்திருந்த ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
ரயில் ஓட்டுனருக்கு அதிர்ச்சி சம்பவம்
இந்திய மாநிலமான ஜார்கண்ட், சாகேப்கஞ்ச் மாவட்டத்தில் பராக்கா-லால்மதியா எம்.ஜி.ஆர்.ரயில்வே லைனில் நேற்று இரு சரக்கு ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 2 ரயில் ஓட்டுனர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் நிலக்கரி ஏற்றி வந்த ரயில் லோகோ பைலட் கங்கேஸ்வர் மால் உயிரிழந்தார். இவர் நேற்றைய தினம் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய மாநிலமான மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் கங்கேஸ்வர் மால். இவர் நேற்று ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
நேற்று பணியை முடித்துவிட்டு இரவில் தனது வீட்டில் ஓய்வு பெறுவதை கொண்டாடும் விதமாக விருந்தில் கலந்து கொள்ள இருந்தார். அதற்காக அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் வீட்டில் காத்திருந்துள்ளனர்.
மேலும், தான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று கங்கேஸ்வர் மால் செல்போனில் கூறியுள்ளார். ஆனால், அவர் இறந்து விட்டார் என்று செய்தி வந்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, உயிரிழந்த ரயில் ஓட்டுனரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |