பிரான்ஸ் இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்! உரிமை கோரிய அல்கொய்தா
பிரான்ஸ் இராணுவத்தினர் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, அல்கொய்தா அமைப்பு உரிமை கோரியுள்ளது.
மாலி நாட்டில் கடந்த 2-ஆம் திகதி பிரான்ஸ் இராணுவத்தினர் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் சென்று கொண்டிருந்த வாகனம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்நிலையில், Al-Zallaqa எனு சிறிய அமைப்பு மேற்கொண்ட் இந்த தாக்குதலுக்கு வெடிகுண்டுகளை வழங்கியது தாங்கள் தான் என அல் கொய்தா அமைப்பினர் உரிமை கோரியுள்ளது.
முன்னதாக மூன்று அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தனர். அந்த தாக்குதலுக்கும் அல் கொய்தா அமைப்பினரே உரிமை கோரியிருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கும் உரிமை கோரியுள்ளனர்.
கடந்த இரு வாரத்திற்குள் ஐந்து பிரெஞ்சு இராணுவத்தினர் மாலி நாட்டில் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.