குளிர்காலத்தில் கட்டாயம் இந்த 5 மாவு வகைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்: கிடைக்கும் பலன்கள் ஏராளம்
குளிர்காலம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த காலத்தில் கட்டாயம் நம் உணவு முறைகளில் மாற்றம் என்பது அவசியம்.
அந்தவகையில் குளிர்காலத்தில் பயன்படுத்தவேண்டிய பல்வேறு வகையான மாவுகளை பற்றி பார்க்கலாம்.
குளூட்டன் இல்லாத இந்த 5 மாவு வகைகளை குளிர்காலத்தில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
மக்காச்சோளம் மாவு
மக்காச்சோள மாவில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுக்கான சிறந்த மூலமாக அமைகிறது.
லேசான இனிப்பு சுவையிலான இந்த மாவு பயன்படுத்தி இனிப்பு மற்றும் பல்வேறு விதமான உணவுகளை செய்து சாப்பிடலாம்.
சோள மாவு
சோளத்திலிருந்து பிரித்தெடுக்கக்கூடிய இந்த வகையிலான மாவு பிரபலமான குளிர்கால உணவாக அமைகிறது. இது உணவுக்கு தனித்துவமான சுவையை சேர்கிறது.
நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த சோள மாவு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் அமைகிறது.
கேழ்வரகு மாவு
கேழ்வரகு மாவில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உட்பட பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த குளூட்டன் இல்லாத மாவு குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சிறந்த உணவாகிறது.
இந்த கேழ்வரகு மாவு உணவுக்கு தனித்துவமான ஒரு சுவையை சேர்ப்பதோடு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது.
கம்பு மாவு
கம்பு மாவில் இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. இந்த கம்பம் மாவு செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது.
ரொட்டி, கிச்சடி அல்லது லட்டு போன்ற பல்வேறு விதமான உணவு வகைகள் கம்பு பயன்படுத்தி செய்யப்படுகிறது.
தினை மாவு
தினை மாவில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் இரும்பு சத்து மற்றும் காப்பர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் மூலமாக இருக்கிறது.
சப்பாத்தி, தோசை அல்லது கஞ்சி போன்ற உணவுகள் தினை மாவு பயன்படுத்தி செய்யப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |