ஜப்பான் ரஷ்யாவை தாக்கிய சுனாமி; இந்தியாவிற்கு பாதிப்பா? - INCOIS விளக்கம்
ஜப்பான் ரஷ்யா சுனாமியை தொடர்ந்து, இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் விளக்கமளித்துள்ளது.
ஜப்பான் ரஷ்யாவை தாக்கிய சுனாமி
புதன்கிழமை ரஷ்யாவின் ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்ப பகுதிக்கு, தென்கிழக்கில் சுமார் 125 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 19.3 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, ரஷ்யாவின் குரில் தீவுகள் மற்றும் ஜப்பானின் வடக்கு தீவு பகுதியான ஹொக்கைடோவில் 4 மீட்டர் உயரம் வரை சுனாமி தாக்கியது.
இதனையடுத்து, அங்குள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்குவது, மக்கள் அலறியடித்து வீதிக்கு ஓடி வரும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இது, பல தசாப்தங்களுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என கருதப்படுகிறது. 1952 ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஹவாயில் 9.1 மீட்டர் அளவுக்கு சுனாமி பேரலைகள் எழுந்தன.
இந்தியாவிற்கு பாதிப்பா?
ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள பணியாளர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். 2011 ஆம் ஆண்டில், டோஹோகு பூகம்பம் மற்றும் சுனாமிக்குப் பிறகு, ஓகுமாவில் உள்ள ஃபுகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலையம் மிகப்பெரிய மின் கட்ட செயலிழப்பை சந்தித்தது.
Tsunami Warning Centre, @ESSO_INCOIS detected an #earthquake of M 8.7 on 30 July 2025 at 04:54 IST (29 July 2025 at 23:24 UTC) @ Off East Coast of Kamchatka (Location: 52.57 N, 160.08 E).
— INCOIS, MoES (@ESSO_INCOIS) July 30, 2025
NO TSUNAMI THREAT to India and Indian Ocean in connection with this earthquake. @ndmaindia pic.twitter.com/UXbPMjxqKu
மேலும், தைவான், பிலிப்பைன்ஸ், அலாஸ்கா, ஹவாய், கலிபோர்னியா, ஓரிகான், வாஷிங்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"இந்த நிலநடுக்கம் தொடர்பாக இந்தியாவுக்கோ அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதிக்கோ சுனாமி அச்சுறுத்தல் இல்லை" என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவைகள் மையம் (INCOIS) தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |