நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு! நீதிமன்றம் முக்கிய உத்தரவு

S J Surya S.J.Suryah
By Raju May 29, 2022 07:17 AM GMT
Report

வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரிய நடிகர் எஸ்.ஜே சூர்யாவின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-03 முதல் 2006-07 வரையிலான ஆறு நிதியாண்டுகளுக்கும்,2009-10ம் நிதியாண்டுக்கும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், வருமான வரியாக 7 கோடியே 57 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை சார்பில் இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை வருமான வரித் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிராக 2015ம் ஆண்டு 6 வழக்குகள் தொடரப்பட்டன.

நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு! நீதிமன்றம் முக்கிய உத்தரவு | Income Tax Case Sj Surya Court Order

அல்லிகுளம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி எஸ்.ஜே.சூர்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரிக் கணக்குகள் மறுமதிப்பீடு நடைமுறைகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று எஸ்.ஜே.சூர்யா தரப்பில் வாதிடப்பட்டது.

வருமான வரித் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல முறை நோட்டீஸ் அனுப்பியும் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யாததால் எஸ்.ஜே.சூர்யா மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கை ரத்து செய்யக் கோரிய அவரது மனுக்களை தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.

இதோடு மறுமதிப்பீடு நடவடிக்கை என்பது, குற்ற வழக்கு தொடர்வதற்கு எந்த விதத்திலும் தடையாக இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US