PAN card இணைக்கவில்லையா? இன்னும் 2 நாள் தான்..மீண்டும் எச்சரிக்கை
PAN அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதிக வரிப் பிடித்தம் செய்யப்படும் என வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
வருமான வரி செலுத்துதல் உட்பட பல்வேறு விடயங்களுக்கு இந்தியாவில் ஆதார் என்பது முக்கியமான ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் PAN எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அரசு அறிவித்தது. இதற்கான கால அவகாசம் கடந்த ஆண்டு சூன் 30ஆம் திகதி வரை இருந்தது.
அத்துடன் 1000 ரூபாய் அபராதத்துடன் ஆதார் எண் பான் அட்டை இணைப்பு செய்யவும் அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் வருமான வரித்துறை மீண்டும் ஒரு எச்சரிக்கை செய்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, வரி செலுத்துவோர் பான் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அதிக வரிப் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் 31ஆம் திகதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்க தவறினால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் பாதிப்பு ஏற்படும். அதாவது, அதிக TDS பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்கலாம். வரி தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் சூன் 31ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.
Kind Attention Taxpayers,
— Income Tax India (@IncomeTaxIndia) May 28, 2024
Please link your PAN with Aadhaar before May 31st, 2024, if you haven’t already, in order to avoid tax deduction at a higher rate.
Please refer to CBDT Circular No.6/2024 dtd 23rd April, 2024. pic.twitter.com/L4UfP436aI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |