இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் எயிட்ஸ் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் கடந்த ஆண்டில் 40 குழந்தைகள் HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய STD/AIDS கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது.
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் எண்ணிக்கை 3,169 என்று STD வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார்.
எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 இல் 607 ஆக இருந்து 2023 இல் 694 ஆக உயர்ந்துள்ளது.
இது 14 சதவீத உயர்வைக் குறிக்கிறது. இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள்.
மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே எயிட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாகவும் வைத்தியர் தர்மகுலசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |