பிப்ரவரி 1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு அமுல்.., எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை பிப்ரவரி 1 முதல் உயர்த்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விலை உயர்வு
மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்களின் விலை உயர்வானது பிப்ரவரி 1-ம் திகதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
எனவே, 180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட விலை உயர்வின் அடிப்படையில் 375 மி.லி., 750 மி.லி., 1000 மி.லி கொள்ளளவுகளில் விற்கப்படும் மதுபான ரகங்களும் மற்றும் 325 மி.லி, 500 மி.லி. கொள்ளளவுகளில் விற்கப்படும் பீர் வகைகளும் அந்தந்த ரகத்திற்கும் மற்றும் கொள்ளளவுக்கும் ஏற்றவாறு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |