தாய்ப்பாலுக்கு இணையான கழுதை பால்: Immune சக்தியை அதிகரிக்க என்ன செய்வது? சித்த மருத்துவரின் பேட்டி
நோய் எதிர்ப்பு சக்தி என்பது, நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகளை அடையாளம் கண்டு அழிப்பது. இதன்மூலம் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி ஒருவருக்கு குறைவாக உள்ளது எனில் அவர்களுக்கு எளிதாக நோய் தாக்கங்கள் ஏற்பட்டு பாதிக்கப்படுகிறார்.
அந்தவகையில், நோய் தாக்கங்களில் இருந்து உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.
கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் வளரும் குழந்தைகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்று சித்த மருத்துவர் யோகவித்யா பகிர்ந்திருக்கிறார்.
கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு
கருத்தரித்த 3 மாதங்களில் தாய்மார்கள் ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை தங்கள் உணவுகளில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
சித்த மருத்துவத்தில், திரிபலா கஷாயத்தை வாரத்தில் 3 முறை குடிப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று கூறுகிறார்.
கருத்தரித்த தாய்மார்கள் பாவன பஞ்சாங்குல தைலத்தை தினம் ஒரு முறை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடித்து வர அவர்களுக்கு மலச்சிக்கல் நீங்கும், உடல் சூடு தணிந்து குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.
பிறந்த குழந்தைகளுக்கு
குழந்தைகள் பிறந்தவுடன் தாய்மார்களுக்கு சுரக்கும் முதல் பால் Colostrum என்கின்ற மஞ்சள் கலந்த பாலை தவறாமல் குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.
தாய்மார்களின் பால் உற்பத்தியை அதிகரிக்க அதிகளவு பசும்பால் மற்றும் தண்ணீரை போதுமானளவு குடிக்க வேண்டும்.
தாய்ப்பால் இல்லாத போது குழந்தைகளுக்கு கழுதை பால் மற்றும் ஒரு மாட்டின் பால் போன்றவற்றை தொடர்ந்து கொடுத்து வர குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள்.
பின் தாய்மார்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதனாலும், வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதனாலும் உடல் சூடு தணிந்து குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
இறைச்சி உணவுகளில் தாய்மார்கள் சுறா மீன் மற்றும் நேந்திரம் பழத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் அவர்களில் பால் உற்பத்தி அதிகரிக்க செய்யும்.
பிறந்து 6 மாதத்திற்கு மேல்
குழந்தைகள் பிறந்து 6 மாதத்திற்கு பிறகு உணவில் ராகி கஞ்சி காய்ச்சி கொடுக்கலாம்.
சித்தமருத்துவத்தில், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்கு வேம்பாகரம் தரலாம் என்று சொல்கிறார்.
இந்த வேம்பாகரம் தயாரிக்க கொழுந்து வேப்பிலை 20, 1 பல் பூண்டு, 3 மிளகு இதனை இடித்து சாறு எடுத்து இதனை தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம்.
Constantinis/Getty Images
6 மாத குழந்தைகளுக்கு 5ml எனவும், 1 வயது குழந்தைக்கு 10ml எனவும் கொடுத்து வர குழந்தைகளின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.
8 மாதங்களுக்கு பிறகு ராகி கஞ்சியையே கொஞ்சம் கெட்டியாக காய்ச்சி களி போல் கொடுக்கலாம். பின் ஒரு வயது குழந்தைகளுக்கு ராகி புட்டு, ராகி தோசை போன்றவற்றை கொடுக்கலாம்.
1- 2 வயதான குழந்தைகளுக்கு
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் லேகியமாக கிடைக்கின்றன. இதனை வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து வர நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன.
பின் சித்த மருத்துவத்தில் கிடைக்கும் தேற்றான் லேகியம் வாங்கி இதனை குழந்தைகளுக்கு தினம் ஒரு உருண்டை கொடுத்து வர உடல் எடை ஏறவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.
மேலும், பச்சரிசி, உளுந்து, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பயிறு இவற்றை பொன்னிறமாக வறுத்து பொடியாக அரைத்து வைத்து அவ்வப்போது கஞ்சி காய்ச்சி கொடுத்து வர நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன.
5 வயதிற்கு மேல்
சத்துமாவு கஞ்சி, சிறு தானியங்களை உணவுகளில் சேர்த்து கொடுத்து வர நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றன.
மேலும், சிறுதானியங்களை முளைகட்டி நிழலில் காயவைத்தது அரைத்து கஞ்சி, தோசை என குழந்தைகளுக்கு செய்து கொடுத்து வர நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |