இலங்கையில் செப்டம்பரில் 7.6 வீதமாக அதிகரித்த பண வீக்கம்
கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண்ணுக்கு அமைய ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 7.6 சத வீதமாக அதிகரித்துள்ளது.
உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் அதிகரித்தமையே பண வீக்கம் அதிகரிக்க காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த விலை கட்டுப்பாடுகளை அரசாங்கம் நீக்கியதை அடுத்து, பொருட்களின் விலைகள் துரிதமாக அதிகரித்தன.
அரிசி, பாண், வெதுப்பக உற்பத்திகள், தேங்காய், காய்கறி, மஞ்சள் தூள் உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த செப்டெம்பர் மாதம் முதல் அதிகரித்தன. ஒக்டோபர் மாதம் பால் மாவின் விலைகள் அதிகரித்தன.
இதனை தவிர சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையானது உணவு அல்லாத ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பண வீக்கமானது 5.7 சத வீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.