அதிகரித்துவரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க சுவிட்சர்லாந்து திட்டம்
சுவிட்சர்லாந்துக்கு வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களுக்காக அரசு செய்யும் செலவும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆகவே, புகலிடக்கோரிக்கையாளர்களையும் வருத்தாமல், செலவையும் மிச்சம்பிடிக்கும் வகையில் சுவிஸ் அரசு சில திட்டங்களைத் தீட்டிவருகிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக செய்யப்படும் செலவு கைமீறிப்போகாமல் இருப்பதற்காக நேற்று சுவிஸ் அமைச்சர்கள் சில திட்டங்களுக்கு ஒப்புதலளித்துள்ளார்கள். அவற்றில் ஒன்று, புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிப்பதன்மூலம், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 54 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை மிச்சம் பிடிக்கும் திட்டமாகும்.
மேலும், சுவிட்சர்லாந்தில் protection status S என்னும் பாதுகாப்பு நிலை பெற்றுள்ளவர்களை பணிக்கமர்த்தவும் திட்டமிடப்பட்டுவருகிறது. இதன் மூலம் நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும், புலம்பெயர்ந்தோருக்கும் வருவாய் கிடைக்கும்.
மொத்தத்தில், இத்தகைய நடவடிக்கைகள் மூலம், 2028 வாக்கில் 650 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மிச்சம் பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |