உலகிலே அதிகரித்து வரும் வாகன தீ விபத்துகள் ? இதுதான் காரணமா?
அமெரிக்காவில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீவிபத்தில் சிக்கியிருக்கின்றன. அவற்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த வாகனங்கள் அனைத்திலும் லித்தியம் அயன் பேட்டரிகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
மின்முனைகள், எலக்ட்ரோலைட், பிரிப்பான் என்ற மூன்று முக்கிய கூறுகளை இது கொண்டுள்ளன.
அந்தவகையில் தற்போது இந்த லித்தியம் பேட்டரி எவ்வாறு செயற்படுகின்றது? அதன் நன்மை, தீமை என்ன என்பதை பார்ப்போம்.
லித்தியம் எவ்வாறு செயற்படுகிறது?
லித்தியம் அயனிகள் எதிர்மறை மின்முனை அல்லது அனோடில் இருந்து நேர்மறை மின்முனை அல்லது கேத்தோடிற்கு பாயும் போது, மின்சாரம் வடிவில் ஆற்றல் மின்கலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது.
செல் சார்ஜ் செய்யும் போது, அந்த அயனிகள் எதிர் திசையில், கேத்தோடிலிருந்து அனோட் வரை பாய்கின்றன.
லித்தியம்-அயன் பேட்டரி பயன்பாட்டிலுள்ள நன்மைகள்
-
லித்தியம்-அயன் பேட்டரி இலங்கையில் பயன்பாட்டிற்கு வராததற்கு காரணம் அதன் அதிக விலை ஆகும்.
-
பேட்டரி மூலம் சேமிக்கப்பட்ட ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களுக்கு நிகர வருமானம் கிடைக்கும்.
- பேட்டரியை கவனமாக நிர்வகிப்பதன் மூலம் 10 ஆண்டுகளாக பேட்டரியைப் பயன்படுத்த முடிந்தால், ரூ. பேட்டரியிலிருந்து ஏழு ஆண்டுகளில் 500,000 பணத்தினை சேமிக்க முடியும்.இது நுகர்வோருக்கு சாதகமான ஒன்றாகும்.
லித்தியம் அயன் பேட்டரியிலுள்ள தீமைகள்
-
விலை மிகவும் அதிகமாகும்.
-
இந்த வகை பேட்டரிகள் எளிதில் வெடிக்கக்கூடிய தன்மை கொண்டவை.
-
இவ்வகை பேட்டரிகளில் தண்ணீர் படுவது ஆபத்தானது அல்ல என்றாலும், இவை எளிதில் வெப்பமாகும் தன்மை கொண்டவை .
-
BMS Circuit இல்லாமல் பயன்படுத்த முடியாது.