109 ஓட்டங்களில் சுருண்ட இந்திய அணி! மொத்தமாக சரித்த ஒற்றை வீரர்..அதிர்ந்த ரசிகர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி
இந்தூரில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று இந்திய அணி முதலில் துடுப்பாடியது.
கடந்த போட்டியில் அறிமுகமான அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் குணமென் தனது தாக்குதலை ஆறாவது ஓவரில் தொடங்கினார். அவரது மாயாஜால சுழலில் கேப்டன் ரோகித் சர்மா (12), சுப்மன் கில் ஆகியோர் வெளியேறினர்.
@AP Photo
அதன் பின்னர் களமிறங்கிய புஜாரா ஒரு ரன்னில் லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஜடேஜாவும் 4 ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த கோலி 22 ஓட்டங்களிலும், ஸ்ரீகர் பரத் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
குணமென் மாயாஜாலம்
மீண்டும் பந்துவீச வந்த குணமென் அஸ்வின் (3), உமேஷ் யாதவ் (17) ஆகியோரை ஆட்டமிழக்க செய்தார். இதன்மூலம் அவர் டெஸ்ட் அரங்கில் இரண்டாவது போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
கடைசி விக்கெட்டாக சிராஜ் ரன் அவுட் ஆக, இந்திய அணி 109 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவுஸ்திரேலியாவின் குணமென் 5 விக்கெட்டுகளும், லயன் 3 விக்கெட்டுகளும், மர்பி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
@PTI
@ICC