பாகிஸ்தானின் அசுரவேக தாக்குதலில் 119க்கு சுருண்ட இந்திய அணி! போராடிய ரிஷாப் பண்ட்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 119 ஓட்டங்களுக்கு சுருண்டது.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
மழை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பமானது. பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே நசீம் ஷா செக் வைத்தார். அவரது பந்துவீச்சில் விராட் கோலி (Virat Kohli) 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் ரோஹித் ஷர்மா (13), அக்சர் படேல் (20), சூர்யகுமார் (7) ஆகியோர் நடையைக் கட்டினர். எனினும் அதிரடியில் மிரட்டிய ரிஷாப் பண்ட் 31 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்கள் விளாசினார். அவரது விக்கெட்டை அமீர் கைப்பற்ற, இந்திய அணியின் ஏனைய விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.
நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் மற்றும் அமீர் ஆகியோரின் மும்முனை தாக்குதலில் இந்திய அணி 19 ஓவரில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளும், அமீர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
Terrific bowling from Pakistan ?
— ICC (@ICC) June 9, 2024
India are bowled out for 119 courtesy of brilliance from the Pakistan bowlers in New York!#T20WorldCup | #INDvPAK | ?: https://t.co/hDU5zJCJfC pic.twitter.com/jjjynhhnTQ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |